நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நடிகர் தனுஷ் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் சதீஷ் குமார் மற்றும் கவுரவ தலைவர் தர்மன் தலைமையில் காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இதில் மன்ற நிர்வாகிகள் பாலன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செட்டிவீதி பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருநங்கைகளுக்கும் இதே போல நிவாரண பொருட்களை மன்ற நிர்வாகிகள் வழங்கினர். இதில் மலர்வேல், மனோஜ், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.