கனவுகள் சில நேரங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

நாம் செய்யும் செயல்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் உறங்கும் போது கனவில் வெளிப்படுகிறது. நாம் பழகும் மனிதர்கள், பார்க்கும் இடங்கள் எல்லாம் நம் கனவில் வெளிப்படுகிறது. சில நேரங்களில் கனவுகள் நிஜ வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உங்களை யாரேனும் ஏமாற்றுவது போல் அல்லது நீங்கள் யாரையேனும் ஏமாற்றுவது போல் கனவு கண்டால் அதற்கு சில காரணங்கள் உள்ளன.

யாரையேனும் ஏமாற்றியது போல் நீங்கள் கனவு கண்டிருந்தால் அதற்கு நீங்கள் ஏதோ தாழ்வு மனப்பான்மை உணர்வுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எதையோ நினைத்து நீங்கள் மனதுக்குள் குற்ற உணர்வுடன் இருந்தால் இவ்வாறு கனவுகள் வரும். அப்படியில்லையெனில் உங்கள் காதல் அல்லது திருமண உறவில் எதையோ நீங்கள் இழந்தது போல் உணர்ந்தாலோ, வேறொருவர் மீது ஈர்ப்பு இருந்தாலோ இவ்வாறு வரலாம். நீங்கள் ஏமாற்றப்படுவதுபோல் கனவு கண்டால் மூன்றாம் நபர்களின் தாக்கமாக இருக்கலாம். அதாவது உங்களுடைய உறவில் மகிழ்ச்சி இருந்தாலும் உங்களின் நெருக்கமானவர்களின் வாழ்க்கை பாதிப்பில் இருந்தால் அது உங்களை ஆழ்மனதில் தாக்கத்தை உண்டாக்கும். அந்த பாதுகாப்பின்மை காரணமாகவும் அவ்வாறு கனவுகள் வரலாம். இல்லையெனில் உங்கள் துணை மீது நம்பிக்கை களைவதாக இருந்தால் , அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை எனில் அதன் அறிகுறியாக இருக்கலாம். இது முழுக்க முழுக்க நம்பிக்கையின்மையால் வரும் பிரச்னை.

காதல் உறவில் தாழ்வு மனப்பான்மை உணர்வுடன் இருந்தாலும், பாதுகாப்பின்மையாக உணர்ந்தாலும் நீங்கள் ஏமாற்றப்படுவது போல் உணர்வீர்கள். பொருட்கள் வாங்கிய விஷயத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஏமாற்றப்பட்ட செய்திகளைக் கேட்க அது ஆழ்மனதில் தக்கத்தை உண்டாக்கி இவ்வாறு கனவு வரலாம் அல்லது உங்களுக்கே ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம் இருந்தால் வரலாம். ஏமாற்றுவதும், ஏமாற்றப்படுவதும் ஆழ்மனதை பாதிக்கும் விஷயம் என்பதால் அது கனவிலும் வந்து தொந்தரவு செய்வது இயல்புதான் எனவே அதை கண்டறிந்து சரி செய்தாலே நிம்மதியாக உறங்கலாம்.