சர்வதேச புலிகள் தினம்

அழிந்து வரும் புலி இனத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.

மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.

எனவே புலிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.