உலக கல்லீரல் அழற்சி தினம்

கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதைக் கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.