கோவையில் முழு ஊரடங்கு துவங்கியது

கோவையில் மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது. இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இன்று மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டிருந்தார்.

இன்று காலையில் இருந்து மிகவும் பரபரப்பாக பொதுமக்கள் அத்தியாவாசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கு திரண்டு சென்றனர். தற்பொழுது கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோரை  காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். மாலையிலேயே ஊரடங்கு துவங்கியதால் உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட என அனைத்தும் அடைக்கப்பட்டன.