ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பாக கல்வி உதவித்தொகை

கோவையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக 12 மாணவ மாணவியருக்கு ரூ.5000 /- வீதம் கல்வி உதவித்தொகை இக்கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு கல்லூரியின் முதல்வர் சிவகுமாரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் ஷோபனா உடன் இருந்தார்.