வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கு இன்று (23.7.2020) தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் சூரரைப் போற்று என்னும் படத்திலிருந்து காட்டுப்பயலே என்னும் பாடல் வெளியிடப்போவதாக படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது காட்டுப்பயலே பாடலை ஒரு நிமிட வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பதற்காக சூர்யா ஒப்பந்தமானார். ஆனால், அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளார். இது போன்ற தோற்றத்தில்தான் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பதை டிசைன் மூலம் செய்து வெளியிட்டுள்ளனர்.

அதனுடன், “இன்று உங்கள் பிறந்தநாள்… அது என்றும் சிறந்தநாள்… இனிய இந்நன்ணாளில் எல்லா நலமும் வளமும் பெற்று, தேக பலம், பாத பலம், ஆயுள் பலம் பெற்று, வாழிய பல்லாண்டு…” என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.