ஆடி அமாவாசை : பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை

கொரோனா பொது முடக்கத்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

நிகழாண்டில் கொரோனா பொது முடக்கத்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு திங்கட்கிழமை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் புனித நீராடவும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் ஆள் நடமாட்டமின்றி கடற்கரையே வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

 

 

Source : Thinamani