மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்

கிரிகோர் ஜோஹன் மெண்டல் 1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே, தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

இவர் மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.

உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல் 1884 ஆம் ஆண்டு மறைந்தார்.