உணவின்றி தவித்தோரின் பசி போக்கிய தன்னலமற்ற தொண்டு நிறுவனம்

பெயர் சொல்ல விரும்பாத தொண்டு நிறுவனம் 2வது வாரமாக  முழு ஊரடங்கு உத்திரவால் கோவை அரசு மருத்துவமனையின் முன் உணவின்றி தவித்தோருக்கு உணவு வழங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இன்று இரண்டாவது வாரமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலான நிலையில்,  முழு ஊரடங்கு அமலான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளின் உதவியாளர்களும், நோயாளிகளும் காலையில் உணவின்றி தவிப்பதை அறிந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசு மருத்துவமனை முன்பு அனைவருக்கும் காலை உணவுகளை வழங்கினார்கள்.

மேலும் நோயாளிகள் மட்டும் இன்றி அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களுக்கும், காலை உணவை வழங்கினர்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களை பயனாளிகள் வெகுவாக பாராட்டினார்கள். இதுபோன்ற தன்னலமின்றி சேவையாற்றும் தொண்டு நிறுவனத்தையும் அதன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரையும் நாமும் பாராட்டுவோம்.