இன்றும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 5 மண்டலங்களில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார மையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்றும் காலை 10 மணி முதல் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் :

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பீளமேடு – தண்ணீர் பந்தல், விளாங்குறிச்சி – கருப்பராயன்பாளையம் ICDC, நீலிக்கோணாம்பாளையம் -எம்.வி.கே.வீதி OPR, கணபதி மாநகர் – ராகூரத்தினம் வீதி, கணபதி – தில்லைநகர் மன்றம், துடியலூர் – அண்ணா காலனி, வெள்ளகிணர் ஸ்ரீவாசா கார்டன் ஆகிய இடங்களிலும்,

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தெலுங்குபாளையம் – கிரின் பார்க் செல்வபுரம், செல்வபுரம் – வடக்கு ஹவுஸிங் யூனிட், குனியமுத்தூர் – பள்ளி வீதி, ராமசெட்டிபாளையம், போத்தனூர் ஸ்ரீராம் நகர், குறிச்சி – ஈச்சனாரி, தொண்டாமுத்தூர் – சத்யா நகர் ஆகிய இடங்களிலும்,

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ராம்குர்பாய் அம்மாள் (RK BAI) லாலி ரோடு, மீனாட்சி ஹோம் (MM Home) சண்முகாநகர், கே.கே.புதூர் அண்ணா நகர் ICDS வேளாண்டிபாளையம், கவுண்டம்பாளையம் – அசோக் நகர், மேல்பகுதி, சீரநாயக்கன்பாளையம் – நேதாஜிவீதி, SN பாளையம், கல்வீராம்பாளையம் – பொம்மனாம்பாளையம் தெற்கு, வடவள்ளி-கூத்தாண்டவர் கோவில் வீதி, ஆகிய இடங்களிலும்,

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிங்காநல்லூர் – ரங்காபுரம், சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம் – கதிரவன் நகர், சாரமேடு செளரிபாளையம் – பாரதி புரம், உப்பிலிபாளையம் – என்.ஜி.ஆர் காலனி, வரதராஜபுரம் மேடு, ராமநாதபுரம் – கருணாநிதி நகர் ஆகிய இடங்களிலும்,

மத்திய மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீதாலட்சுமி (SLM) – சண்முகா நகர், பட்டுநூல்-உப்பாரவீதி, ஜெயில் ரோடு (JRM) – நியூ சிற்றம்பலம்  லே-அவுட், PN பாளையம், இரத்தினபுரி – PM சாமி காலனி, இராஜவீதி – புல்லுகாடு ஹவுஸிங் யூனிட், சி.டி.எம் ஹோம் – காந்திபுரம் 3 மற்றும் 4-வது வீதி, வாலாபாய் வந்தீராவன் (VVM Home) – பெரியகடைவீதி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இம்முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தொடர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பாரிசோதனை செய்து கொள்ளலாம். 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோயாளிகள், நுரையீரல், சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் தொற்று அறிகுறி உள்ளவர்கள் என பல கட்டங்களில் பல்ஸ் மீட்டர் மற்றும் தேர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த பரிசோதனை முகாமில் கலந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்

1077, 0422-2302323, 9750554321.