தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் திண்டுக்கல், கோவை, நீலகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.