நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசின் சில அறிவுரைகள்

சென்னை மாநகராட்சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள சில அறிவுரைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காலை ஒரு வேளை கபசுர குடிநீர் பருக வேண்டும்.

அவ்வப்போது வெந்நீர் குடிக்க வேண்டும்.

உப்பு & மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை என இருவேளை வாய் கொப்பளிக்க வேண்டும்.

துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி & உப்பு கலந்த நீரில் நீராவி பிடிக்க வேண்டும்.

மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை, மாலை இரு வேளையும் பருக வேண்டும்.

மூலிகை தேனீர் & வேப்பம் பூ ரசம்,  தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

அன்னாசி,  ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.

தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் காலை 7:30 மணிக்குள் அல்லது மாலை 5 – 6 மணிக்குள்ளாக சூரிய குளியல் மேற்கொள்ளலாம்.

இவற்றின் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.