அறிவை வளர்ப்போம்..!! அறிந்து கொள்வோம்..!!

ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் அவர்கள் பிறந்தநாளான ஆகஸ்டு 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஆரம்பக்கால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 29 ஆம் தேதி தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1 ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சாமுவேல் ஹானிமன் பிறந்த தினமான ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்கள் பிறந்த தினமான டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜேம்ஸ் பார்க்கின்சன் பிறந்த தினமான ஏப்ரல் 11 ஆம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் ப்ரௌன் 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25 ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.