என்.ஜி.பி கல்லூரியில் சர்வதேச மாநாடு

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறை சார்பில் “உயிர் மருத்துவப் பொறியியல் மற்றும் மருத்துவப் படிமவியல் அமைப்புகள் – 2020” என்னும் தலைப்பில் சர்வதேச மெய்நிகர் மாநாடு ஜூன் 6 முதல் 7 வரை நடைப்பெற்றது.

இம்மாநாட்டினை துறைத் தலைவர் பிராபகர் அவர்களின் வரவேற்புரையோடு கல்லூரி முதல்வர் பொற்குமரன் துவக்கி வைத்தார். மாநாட்டின் அமைப்புச் செயலாளர் ராஜசிங்கம் நிகழ்ச்சி நிரல் அறிவிக்க

முதல் அமர்வில் இங்கிலாந்து நாட்டின் ஹல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அன்பு உரையாடினார்.

அடுத்தடுத்த அமர்வுகளில் சிங்கப்பூர் நாட்டின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தைச் சார்ந்த யுவராஜ், தாய்லாந்து நாட்டைச் சார்ந்த கார்த்திக் மற்றும் தாய்வான் நாட்டின் டிரைப்பாட் நானோ தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த பெரியசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.

இம்மாநாட்டினை ராம்குமார் மற்றும் லோகேஷ்குமார் இணைந்து ஒருங்கிணைத்தனர். துறை மாணவியர்கள் பவித்ரா மற்றும் கார்த்திகா இணைந்து தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வானது இணையம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.