கோவை மக்களுக்கு நோய் எதிர்ப்பு ஹோமியோபதி மாத்திரைகள்

வேலாண்டிபாளையம் பெரிய காணிக் கோனார் தெரு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு பிரனேனியா – 30 என்ற நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் கோவை ஹோமியோபதி மருத்துவர்கள் அசோசியேசன் சார்பாக 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இன்று கொடுக்கப்பட்டது.

ஹோமியோபதி மருத்துவர்கள் அசோசியேசன் சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளான அர்சானிக்கம் ஆல்பம் – 30 என்ற மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது கோவை மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து முதல் முறையாக பிரனேனியா -30 என்ற மாத்திரைகள் இன்று முதல் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். முதல் கட்டமாக வேலாண்டிபாளையம் பகுதியிலும், கோவைப்புதூர் பட்டாலியன்களுக்கு 2000 பேருக்கு இந்த நோய் எதிர்ப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

சென்னையில் மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்ட பிரனேனியா – 30 (இம்மின் பூஸ்டு -2) என்ற மாத்திரை தற்போது ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கோவை பகுதியில் கொடுக்க துவக்கி உள்ளனர். இந்த மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள் யாருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று மருத்துவர்களின் ஆய்வு குறிப்பிடுவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பெரிய கானிக் கோனார் தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சமூக இடைவெளிவிட்டு அப்பகுதி மக்களை அமரவைத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.