சிவா டெக்ஸ்யார்னின் 49 ரூபாய் ‘மெடிக் விரோஸ்டட்’ முகக்கவசம்

வைரஸ் எதிர்ப்பு & பாக்டீரியா எதிர்ப்பு இருக்க கூடிய மறுபயன்பாட்டுக்கு ஏதுவான மெடிக் விரோஸ்டட்’  முகக்கவசத்தை சிவா டெக்ஸ்யார்ன் 49 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

இந்த பிரத்யேக முகக்கவசம், நான்கு நிறங்களிலும், இரண்டு அளவுகளிலும் 49 முதல் 69 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 99 சதவிகிதத்திற்கும் அதிகமான வைரஸ் எதிர்ப்பு வீதம் கொண்ட இந்த முகக்கவசம், மிகவும் பாதுகாப்பானது.

இந்த முகக்கவசம் பாதுகாப்பான முறையில் மூன்று முறை உபயோகிக்கலாம். இந்த முகக்கவசத்தில் எந்த நச்சு இரசாயனமும் இல்லை என்பதை மறுபயன்பாட்டிற்காக உறுதி செய்ய பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிவா டெக்ஸியார்ன் வைரஸ் எதிர்ப்பு முகக்கவசம், ஐ. எஸ். ஓ தரச்சான்றிதழையும் (ISO18184) பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய, சிவா டெக்ஸியார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், விலை குறைந்த ஆனால் தரமான பாதுகாப்பான முகக்கவசங்களை சாமானியர்களுக்கு வழங்குவதே சிவா டெக்ஸியார்ன் நிறுவனத்தின் குறிக்கோள். இதன் மூலம், கொரோனா உள்ளிட்ட மற்ற நோய் தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க முடியும். இது ஒரு இந்தியா தயாரிப்பு, ஆனால் சர்வதேச தரம் வாய்ந்தது என்றார்.

பிரத்யேகமான இந்த முகக்கவசத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மெடிக் பிராண்டின் பெயரில், இந்நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விரோஸ்டாட் முகக்கவசங்களையும் மற்ற பாதுகாப்பு உபகரணங்களையும் பிபிஇ பாதுகாப்பு உபகரணங்களையும் தயாரித்து வருகிறது.