இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல்

கோவை மாவட்டத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சிகள் இணையதளம் வாயிலாக  (Webinar) முறையில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு வருடமும் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரம் மற்றும் ஜூலை 15 அன்று திறன் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணைய வழியாக நடத்த திட்டப்பமிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 2020 ஜூலை இரண்டாவது வாரத்தில் (08.07.2020 முதல் 15.07.2020) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் ஜூலை 15 அன்று திறன் நாள் நடத்தப்பட உள்ளது.

1.08.07.2020 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி.

2.09.07.2020 அன்று மகளிர்க்கான உயர்கல்வி, போட்டித் தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு

3.10.07.2020 அன்று பள்ளி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு

4.13.07.2020 அன்று தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்முனைவோர்களைக் கொண்டு சுயதொழில் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

5.14.07.2020 அன்று வேலைநாடுநர்களுக்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் தனியார் துறை வேலை, இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதளம் வாயிலாக முறையில் நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம். அனைத்து மனுதாரர்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.