தமிழ் தொண்டர் பரிதிமாற் கலைஞர் பிறந்ததினம்

தமிழுக்குத் தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி.

இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம்வயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.

இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.