மக்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான பாலகுமாரன் 1946 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பழமானேரி என்னும் சிற்றூரில் பிறந்தார்.

இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும், சில கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்), இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்), தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் – சிறுகதை தொகுப்பு) மற்றும் கலைமாமணி போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தன்னுடைய எழில்மிகு கற்பனைத் திறனால், எழுத்து மற்றும் திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பெற்ற இவர், 2018 ஆம் ஆண்டு மறைந்தார்.