தங்கத்தில் முகக்கவசமா!!!

கொரோனா காலத்தில் அனைவரும் தற்காப்பு கவசமாக முகக்கவசத்தை  பயன்படுத்திவருகின்றனர். ஆரம்பத்தில் இது 10 ரூபாய் அறுவை சிகிச்சை முக்கவசம் பயன்படுத்தினர். பின்பு இதற்கான பயன்பாட்டு காலம் குறைவு என்பதால் பலவகையான துவைத்து மறுபடியும் பயன்படுத்த கூடிய துணியாலான முகக்கவசத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சில செல்வந்தர்கள் 100, 200 இல்லாமல் 1000, 2000க்கு முகக்கவசம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை தாண்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த சங்கர் என்பவர் ரூ.2.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலான முகக்கவசத்தை பயன்படுத்துகிறார்.

10 ரூபாய் முகக்கவசம் மீண்டும் மீண்டும் வாங்குவதற்கு பதிலாக நாம் துணியிலான முகக்கவசத்தை பயன்படுத்தினால் இவர் அனைத்தையும் தாண்டி தங்கத்தில் முகக்கவசம் அணிந்துள்ளார்.