அறியாததை அறிந்து கொள்வோம்..!!

பசிபிக் கடலில் சூரிய உதயத்தையும், அட்லாண்டிக் கடலில் சூரியன் மறைவதையும் பார்க்கக்கூடிய ஒரே இடம் பனாமா.

1894 ஆம் ஆண்டில் படமாக்கப்பட்ட முதல் விளையாட்டு குத்துச்சண்டை ஆகும்.

முதலைகளால் அதனுடைய நாக்கை நகர்த்த முடியாது.

முதல் ballpoint பேனாக்கள் 1945ல் 12 டாலருக்கு விற்கப்பட்டன.

கம்பளிப்பூச்சிகளுக்கு 4,000 தசைகள் உள்ளன. இதில் தலைப்பகுதியில் மட்டுமே 248 தசைகள் உள்ளன.

உலகிலேயே, செவ்வக வடிவில் இல்லாத ஒரே தேசிய கொடி, நேபாளத்தின் தேசிய கொடி ஆகும்.

தேனீக்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒரு வயிறு சாப்பிடவும், இன்னொரு வயிறு தேனை சேகரிக்கவும் பயன்படுகிறது.

அகச்சிவப்பு மற்றும் புற ஊதா ஒளியைப் பார்க்கக்கூடிய ஒரே விலங்கு தங்கமீன் மட்டுமே.

தேனீ ஓசனிச்சிட்டுகளின் இறக்கைகள் நொடிக்கு 80 தடவை வேகமாக அடிக்கும்.

சூரியக் குடும்பத்தில் மிகக் குளிரான கிரகம் யுரேனஸ்.

பைபிள்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு சீனா.

மிதிவண்டியில் உலகை சுற்றி வந்த முதல் பெண் அன்னி கோஹன் கோப்சோவ்ஸ்கை (Annie Cohan Kopchovsky) ஆவார்.

மெக்ஸிக்கோவில் உள்ள ஒரே ஒரு கடையில் மட்டும்தான் சட்டப்பூர்வமாக துப்பாக்கி வாங்க முடியும்.

ஏப்ரல் 23, 2005 ஆம் ஆண்டு முதல் youtube வீடியோ பதிவேற்றப்பட்டது.

Axolotls என்ற ஒரு நீர்வாழ் உயிரினத்தினால் அதனுடைய மூட்டு, உடல் உறுப்பு மற்றும் மூளையின் சில பாகங்களைக் கூட மீண்டும் உருவாக்கி கொள்ள முடியும்.

கரீபியன் பகுதியில் 7,000-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.

உலகின் மிகப் பழமையான வானியல் கடிகாரமான, ப்ராக் வானியல் கடிகாரம் (Prague astronomical clock) 1410 இல் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டது.

அண்டார்டிக் தீவுகளில் காணப்படும் ஜெண்டூ பென்குயின்களால் (Gentoo Penguin) ஒரு மணி நேரத்திற்கு 40 கி.மீ. வரை நீந்த முடியும்.

கடல் நீர் சுமார் 28.4 டிகிரி பாரன்ஹீட்டில் உறைகிறது.