50 குடும்பங்களுக்கு நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் நிவாரணப் பொருட்கள்

செல்வபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அறிவுறுத்தலின்படி நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை செல்வபுரம் 76 வது வார்டுக்குட்பட்ட சிஜிவி  நகர் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அறிவுறுத்தலின்படி நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் மகாகணபதி ஜுவல்லர்ஸ் சுரேஷ் குமார், எஸ்.ஆர் குமார் தலைமையில் 50 குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முருகவேல், ஆவின் முத்து, சீனிவாசன், ராஜேந்திரன், கீர்த்தி, மகேந்திரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.  மேலும் நிவாரணப் பொருட்கள் பெற்ற பொதுமக்கள் நல்லறம் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.