கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணியில் அதிவிரைவுப் படைகள்

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, பிரத்யேகமாக 20 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நான்கு படைகள் செயல்படும். அவர்கள், அந்தந்தப் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மக்களை கண்காணிக்கவும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் கண்காணிப்பார்கள். ஆகவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் பொதுமக்கள் தாங்கள் அதிவிரைவு படையின் கண்காணிப்பில் இருப்பதை உணர்ந்து,
கோவை மாநகராட்சிக்கு, கொரோனா வைரஸ் தடுக்க போதிய ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கேட்டுக்கொண்டார்.