கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் சேவை திட்ட பணிகள் துவக்கம்

கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 – B1 மாவட்ட ஆளுநர் PMJF கருணாநிதியின் பணி துவக்க நாளில் சேவைத் திட்டங்களைச் துவங்கும் வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 40 லட்சம் செலவில் சேவை திட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

மேலும் இரண்டாம் துணை ஆளுநர் MJF  அரிமா ராம்குமார் தலைமையில்  புதிய 5 உறுப்பினர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆளுநரின் சேவை திட்டங்களுக்கு நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளரும் மாவட்ட அரிமா சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் அரிமா செந்தில்குமார் ரூ. 1 லட்சம் ஆளுநரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா சங்க செயலர் ராஜ் மோகன், நேரு நகர் அரிமா சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.