பாரதியார் பல்கலைக்கழகம் – ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

பாரதியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக கோவிட்-19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கபசுர குடிநீர், நெல்லிக்கனி மற்றும் கைகழுவும் திரவம் வழங்கும் நிகழ்வு வடவள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நோய் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு முன்னேற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஈ.ஆர்.சந்திரசேகர் கலந்துகொண்டார். தொடர்ந்து மூன்று நாட்கள் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைவார்கள்.மேலும் இந்நிகழ்வில் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு மாணவிக்கு இருசக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் முருகன், ரோட்டரி கிளப் வடவள்ளி நிறுவனத்தலைவர் மாணிக்கவாசகம், தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஜான் சிங்கராயர், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சங்க தலைவர், துணைத்தலைவர், வடவள்ளி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.‌ நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெறுப்பு அண்ணாதுரை ஏற்பாடு செய்து இருந்தார்.