பிஎஸ்ஜி மருத்துவமனையின் புதிய சஞ்ஜீவனி திட்டம்

கோவை, பிஎஸ்ஜி மருத்துவமனையின் சார்பாக மருந்து மாத்திரைகளை நீங்கள் இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ள புதிய சஞ்ஜீவனி திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக அல்லது போன் மூலமாக ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர்  டாக்டர்.ஜெ.எஸ்.புவனேஸ்வரன் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பி.எஸ்.ஜி மருத்துவமனை மக்கள் நலனிற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சஞ்ஜீவனி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பி.எஸ்.ஜி மருத்துவமனை மருந்தகத்தில் ரூபாய் 1000 க்கும் மேல் மருந்து, மாத்திரைகள் ஆர்டர் செய்பவர்களுக்கு இலவசமாக கூரியர் மூலமாக உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் பெறப்படாது.

ரூபாய் 1000க்கு கீழே மருந்து மாத்திரை ஆர்டர் கொடுப்பவர்களுக்கு, மருந்து மாத்திரை கட்டணத்துடன் கூடுதலாக கூரியர் கட்டணம் பெறப்படும். இந்த சஞ்ஜீவனி திட்டம் இந்தியா முழுமைக்குமான ஒரு திட்டமாகும். நம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இந்த திட்டத்தின் மூலமாக உங்களது மருந்து மாத்திரைகளை உங்கள் இல்லங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் 82203 33747 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி அல்லது போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இது கோவையில் முதன்முறையாக பி.எஸ்.ஜி மருத்துவமனை இந்த சஞ்ஜீவனி திட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.