5.50 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டும் பணி துவக்கம்

கோவை மாவட்டம், ஆலந்துறை பேரூராட்சியில் மூங்கில்மடைக்குட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 5.50 கோடி மதிப்பில் 64  குடியிருப்புகள் கட்டும் பணிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணியினை துவக்கிவைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரதீப், உட்பட பலர் உள்ளனர்.