ஊரடங்கு காரணமாக இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது

ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாடு குறித்து பேசுகிறார்.

இவரது உரையில்,

இந்த காலத்தில் காய்ச்சல் சளி உள்ளிட்டவைகள் வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம்

இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்

அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம்

ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது

சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்

இந்த வைரசை எதிர்த்து நாம் போராடி வரும் வேளையில் பருவ மழை வேறு தொடங்கிவிட்டது.
பொதுமக்களில் பலர் பொறுப்பற்று சுற்றித் திரிகிறார்கள், பலர் மாஸ்க் அணிவது இல்லை.

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது; இரண்டாம் கட்ட தளர்வுக்குள் தேசம் நுழைந்துள்ளது

நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

அன்லாக் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைய ஆரம்பித்துவிட்டது.

கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பிற நாடுகளை ஒப்பிடும்போது நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னோடியாக இருக்கின்றோம்.

இப்போது செய்யக்கூடிய சிறு தவறுகள் கூட பெரிய இழப்புகளை கொண்டுவரலாம் பல இடங்களில் பொதுவாக பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது

இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை.

தற்போதைய சூழ்நிலையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது கட்டுப்பாடுகள் மூலம் பல லட்சம் ரூபாய்களை நாம் மிச்சப்படுத்தி உள்ளோம் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் அனைவருக்கும் பொருந்தும்

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

அமெரிக்க மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு மக்கள் இந்தியாவில் பலன் அடைந்துள்ளனர்

பருவமழை காலத்தில் கொரோனா குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை

விவசாயிகளுக்கு சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. சிறிய தவறுக்கு கூட இடங்கொடுக்க கூடாது

பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை சீராகவே உள்ளது

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நிலைமை சீராக உள்ளது.