ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் பிறந்த தினம்

மைக் டைசன் உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

இவர் 1982ஆம் ஆண்டு ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட்சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையை பெற்றார்.

ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். இவர் 2006ஆம் ஆண்டு குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.