சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிக்க தொழிற்சாலைகளுக்கு அறிவுரை

கோவை மாவட்டத்தில், இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசியப் பசுமை தீர்ப்பாயம் அசல் மனுவின் உத்தரவின்படி, ஊரடங்கு நாட்களில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவித்ததோடு அதற்கான காரணங்களை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையினை தீர்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அசல் மனுவின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல்  விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இயங்க வேண்டும் என  அறிவுறுத்தப்படுகிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.