‘இந்திய அளவில் தமிழகம் முதலிடம்’

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக குருவம்பாளையம், வேடப்பட்டி, வன்னியம்பாளையம், நம்பி அழகன்பாளையம் ஆகிய இடங் களில் ஏழு நாட்கள்  முகாம்கள் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் நான்காம் நாள் வேடப்பட்டியில் உள்ள பி,எஸ்.ஜி பள்ளியில் முகாமிட்டு இருந்தனர்.

அன்று மாலை இந்திய பொருளாதார மேம்பாட்டில் பண மில்லா பரிவர்த்தனை உரையரங்கு என்ற தலைப்பில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் இளமாறன் மற்றும் பொருளியல் துறை தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.

இதில் சிறப்பு விருந்தி னர்களாக நாட்டு நலப் பணித் திட்டத்தின் வட்டார இயக்குனர்  சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு திட்ட அலுவலர் ராஜசேகரன் பங்கேற்றனர். கோவை மெயில் சார்பாக சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடப்பட்டது.

அப்போது, தமிழகத்தில் சுமார் 4 லட்சம் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் 40 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் இந்திய அளவில் நாட்டு நலப் பணிகள் மேற்கொள்வதில் தமிழக மாணவர்கள் முதலிடம் வகிக்கிறார்கள்.

இது பெருமை கொள்ளத் தக்க செய்தி. என்,எஸ்.எஸ் இன் நோக்கம் என்னவென்றால் மாணவர்களின் ஆளுமை திறனை வளர்ப்பது.  என்.எஸ்.எஸ் இன் கருப் பொருளானது, எங்களுக்காக அல்ல, உங்களுக்காக என்பது தான்.

அதாவது இந்த சேவைகள் அனைத்தும் எங்களுக்காக அல்ல. மக்களாகிய உங்களுக்காக தான் என்பது தான் அதன் பொருள்.

மாணவர்கள் தங்கள் கற்ற கல்வி, தாங்கள் பெற்ற அனுபவம் ஆகியவை மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே இந்த ஏழு நாட்கள் முகாமின் நோக்கம். அவர்கள் பெற்ற கல்வி, வாழ்க்கையோடு சம்மந்தபட்டதாக இருக்க வேண்டும்.

பல்வேறு குடும்ப சூழ்நிலை களில் இருந்து வந்திருக்கும் மாணவர்கள், இங்கே உள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு தங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள். இந்த திட்டம் மத்திய அரசு நிதியுதவி வழங்கி வரும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் தலா ஒரு மாணவருக்கு வருடத்திற்கு 250 ரூபாய் வழங்குகிறது. இந்த மாதிரி முகாமின் போது மாணவர்களின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக 450 ரூபாய் வழங்கி வருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவு மற்றும் இதர தேவைக்காக சராசரியாக 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை செலவாகும். ஆனால் இங்கே மாணவர்களுக்கு 7 நாட்களுக்கு 450 ரூபாய் வைத்து உணவு மற்றும் இதர தேவைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே சகிப்பு தன்மை வளர்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பங்கெடுக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் சமூகத்தில் சிறந்த மாணவர்களாக உருவெடுப்பார்கள். திட்ட அலுவலர்கள் அனைவரும் அனை வரும் வாட்ஸ் அப் செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளோம். இதன் மூலம் வருங்காலத் திட்டங்கள், செய்யவேண்டிய பணிகள் உள்ளிட்ட அனை த்தையும் பகிர்ந்து கொள்வோம்.

எதிர்காலத்தில் மாணவர் களின் எண்ணிக்கையை அதிரிக்கவுள்ளோம். அதற்காக மத்திய அரசிடம் கோரிக்கையை வைத்துள்ளோம்.