பறக்கும் படையுடன் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி ஆகியோர் மாநகராட்சியில் பல பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தனர்.

பறக்கும் படை அதிகாரிகளுடன் இடையர்பாளையம், மேட்டுப்பாளையம் சாலைபகுதி கடைகள், உக்கடம் சில்லறை விற்பனை மீன் மார்க்கெட், தெலுங்குவீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, துடியலூர் விஸ்வநாதபுரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் தனிமனித இடைவெளி, முகக்கவசத்தின் முக்கியத்துவம், கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.