பொருளாதார சீர்திருத்த தந்தை பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

பின்னர் மத்திய அரசின் கீழ் வெளியுறவு அமைச்சர் (1980-1984), உள்துறை அமைச்சர் (1984), பாதுகாப்புத் துறை அமைச்சர் (1984-85), மனித வள மேம்பாட்டு அமைச்சர் (1985) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தையான பி.வி.நரசிம்ம ராவ் 2004 ஆம் ஆண்டு மறைந்தார்.