நம் கண்முன் நிற்கும் காளிங்கராயன் !

முதல்வரை பாராட்டிய குடிமகன் !

கோவையில் நடைபெற்று வந்த வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த சாதாரண குடிமகன் முதல்வரை போற்றி புகழ்ந்து மெய் சிலிர்த்து பேசினார்.

இவரை பற்றி பேச ஆரம்பித்த இவர், “வரலாற்று சிறப்பு மிக்க இந்த நல்ல நேரத்தில் நாங்கள் நன்றி சொல்லும் முன், இந்த வான்மகனே மழையாய் இந்த சரித்திர நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டது.

60 ஆண்டுகால கோரிக்கை நாங்கலெல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை, வரலாற்று சாதனையாளர் ஐயா முதல்வர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த, கண்ணீரை காணிக்கையாக்கி இதயம்கூர்ந்த எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இதனை விட வேறு எப்படி நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை.

இதற்கு முன்னால் எத்தனையோ அரசுகள் வந்து வந்து சென்றன, எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ கோரிக்கைகள் வைத்தோம். ஆனால், உண்மையிலேயே இந்த திட்டத்தை ஒரு விவசாயினால் தான் புரிந்துகொள்ளமுடியும். மண்ணின் மைந்தனாக மத்தியஅரசு நிதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மாநில அரசின் நிதியை கொண்டு இதனை செய்ய முடியும் என்று செய்துள்ளார்.

விவசாயிகளும் இங்கு வாழும் லட்சக்கணக்கான மக்கள் மனதிலும் என்றும் காளிங்கராயனாக எங்கள் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல, அவர் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அத்தனையிலும் நாங்கலெல்லாம் நன்றி கடன் பெற்றுள்ளோம். இந்த கொங்கு மண்டலமே அவரை வாழ்த்தி வாங்குகிறோம் என்று அவர் பாதம் தொட்டு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

மேலும் இந்த கொரோனா காலத்திலும் கூட நமது முதல்வர் களத்திற்கு வந்து அடிக்கல் நாட்டு விழாவில் எப்படியாவது டிசம்பருக்குள் இப்பணியை முடித்து காட்டுவேன், குளம் குட்டைகளில் தண்ணிரை நிறுத்து காட்டுவேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் மாதம் ஒரு முறை களப்பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தார்.

இப்படி ஒருவரை நாம் முதல்வராக கொண்டுள்ளோம் என்பதை எண்ணி நாங்கள் நிச்சியமாக பெருமை கொள்கிறோம் என்று சொல்லி விடைபெறுகிறேன், என்று மெய் சிலிர்த்து பேசினார்.