அருண் ராஜம்மாள் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் இலவச கப சுர குடிநீர்

கோவை ஆர்.எஸ். புரம் அருண் ராஜம்மாள் சேரிடபிள் டிரஸ்ட் சார்பாக டி.பி ரோட்டில் டிரஸ்ட் பில்டிங் முன்பாக கொரோனா போன்ற கொடிய நோய்கள் பொதுமக்களை தாக்காமல் இருக்க இலவச கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வினை ஆர்.எஸ். புரம் காவல்நிலையம் ஆய்வாளர் கனகசபாபதி தொடங்கி வைத்தார்.

இதில் டிரஸ்டின் செயலாளர்கள் மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், செல்லதுரை. மேலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று மாதங்கள் தினம்தோறும் காலை 11மணி முதல் 1மணி வரை இலவச கப சுர குடிநீர் வழங்க பொதுமக்களுக்கு வழங்கவுள்ளனர்.