ஆட்சியர் அலுவலகத்தில் காய்ச்சல் சோதனை

கொரோனோ  கட்டுப்படுத்தும் வகையில் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல் சோதனை நடத்தப்படுகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் இன்ஃப்ரா ரெட் மீட்டர்கள் மூலம் காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது.

இயல்பான உடல்நிலையில் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் அதோடு காய்ச்சல் சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு அதற்கென அமைக்கப்பட்டுள்ள இடங்களில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது