சத்தான கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி

நம் உடல் எடையை குறைப்பதற்கும், உடலுக்கு வலு தரும், கொள்ளுவை வைத்து சத்தான சுவையான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்

கொள்ளு – அரை கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகத் தூள்,  தனியாத் தூள் – தலா அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

செய்முறை

இரண்டு நாள் முன்பே கொள்ளுப் பயறை ஊறவைத்துக்கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து முளை வரும்வரை மூடிவையுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைகட்டிய கொள்ளுப் பயறுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, சீரகத் தூள், தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

கோதுமை மாவுடன் உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள்.

மாவைச் சிறிதுநேரம் ஊறவைத்துச் சப்பாத்திபோல் திரட்டி அதனுள் அரைத்துவைத்துள்ள கொள்ளுக் கலவையை வைத்து மூடி மீண்டும் திரட்டிக்கொள்ளுங்கள்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியைச் சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.

சத்தான சுவையான கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.