10, +2: தனியார் பள்ளிகள் திடுக்கிடும் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். தேர்ச்சி மதிப்பெண்களை முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு வைத்து கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வருகைப்பதிவு மற்றும் மாணவர்களின் முந்தைய தேர்வு விடைத்தாள்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை தேர்வுத் துறை கோரிய நிலையில், பெற்றோரிடம் அந்த விடைத்தாள்கள் இல்லை என தனியார் பள்ளி சங்கங்கள் தெரிவித்துள்ளன. கட்டாயப்படுத்தினால் தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். எனவே, பள்ளிகளில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறை இயக்குனருக்கு, நந்தகுமார் கூறியுள்ளார்.