இலவச பாட புத்தகங்கள் 22ஆம் தேதி முதல் வினியோகம்

வரும் 22 ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 30ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க கோரியுள்ளார். மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன என பள்ளி கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.