தற்போது வக்கீல், எப்போது நடிகை?!

சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று ’சில்லுனு ஒரு காதல்’. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா – ஜோதிகா தம்பதிகளின் மகளாக ஒரு குட்டிப்பாப்பா நடித்திருக்கும் என்பதும், ஸ்ரேயா சர்மா என்ற அந்த குழந்தை நட்சத்திரம் செய்யும் சேட்டைகளும் குழந்தைத்தனமாக இருந்ததாகவும் விமர்சகர்கள் தெரிவித்ததுண்டு.

இந்த நிலையில் இந்த படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ குட்டி பாப்பா ஸ்ரேயா சர்மா, தற்போது வளர்ந்து வழக்கறிஞராக மாறியுள்ளார். ஒரு பக்கம் வழக்கறிஞர் படிப்பு, இன்னொரு பக்கம் திரை உலகம் என மாறி மாறி இயங்கி வந்த ஸ்ரேயா சர்மா தற்போது முழுநேர வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் திருப்திபடுத்தி வருகிறார். வக்கீல் தொழிலை கவனித்துக் கொண்டே தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் வாய்ப்புகள் வந்தால் நடிக்கவும் தயார் என்று ஸ்ரேயா சர்மா குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகிகளுக்கு பஞ்சம் இருக்கும் இந்த நேரத்தில் ஸ்ரேயா சர்மா தமிழில் அறிமுகமானால் தமிழ் திரையுலகில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.