சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை – மருத்துவ நிபுணர் குழு

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா குறைய ஆரம்பித்தாலும் 3 மாதத்துக்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் 2வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்குப் பின் ஆரம்பிக்கலாம்.

அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.