தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவக்குழு பரிந்துரை

பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முதலமைச்சர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவக்குழுவினர் பரிந்துரை.

எந்த ஒரு நோயும் உச்சத்திற்கு சென்றுதான் படிப்படியாக குறையும் என்பதால் நோய் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், ஊரடங்கு தளர்வுகளை குறைக்கவும் மருத்துவக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவினர்கள் பேசுகையில், சென்னையில் 3 மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் அதிக பரிசோதனை நடைபெறுகிறது. அதனால் தான் தொற்றுக்களை கண்டறிய முடிந்துள்ளது.
சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஊரடங்கை கட்டுப்படுத்தி நோயின் தீவிரத்தை குறைக்க பரிந்துரை செய்து உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.