ரசிகர்கள் இல்லாத ஐபிஎல் போட்டி!

ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் இந்தண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதற்காக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட அப்போட்டிகள் குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகள் அடங்கிய சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை இந்தாண்டே நடத்த கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் விரும்புவதாகவும், வீரர்களும், அணி உரிமையாளர்களும் அதையே எதிர்பார்ப்பதால், விரைவில் அதுகுறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கங்குலி குறிபிட்டுள்ளார்.