ஆதித்யா தொழில் நுட்பக் கல்லூரியில் இணைய வழியில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்பக் கல்லூரியின் மின்னியல் அறிவியல் புலம் (இசிஇ, இஇஇ) துறையின் சார்பில் இரண்டு தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் (ஜூன் 05 மற்றும் 06 ) நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் மையக் கருவாக மேம்படுத்தப்பட்ட மின்னியல், கணினி மற்றும் தொலைத் தொடர்பியல் தொழில் நுட்பம் சார்ந்த தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் முதுகலை மற்றும் இளங்கலை பொறியியல் கல்லூரியினைச் சார்ந்த 460 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் ஆய்வுக் கட்டுரையினை நேரலையின் மூலமாக சமர்ப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயசித்ரா, மணிபால் பல்கலைக்கழக பேராசிரியர் திருநாவுக்கரசு, மஸ்கட் ஹையர் காலேஜ்ஆப் டெக்னாலஜி பேராசிரியர் குணசேகரன் மற்றும் பேராசிரியர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய கால சூழல்களுக்கு ஏற்ப மாணவ மாணவியர்கள் எந்தத் துறையில் தங்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்திட வேண்டும் என 5G கம்யூனிக்கேசன் தொழில் நுட்பம், கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், கேஸ் பவர் பிளான்ட் தொழில் நுட்பம் மற்றும் உயிரி தொழில் நுட்பம் தலைப்புகளில் உறையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார், கல்லூரியின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி சித்ரா மனோகர் மற்றும் கல்லூரியின் முதல்வர் முத்து முன்னிலை வகித்தனர்.

இக்கருத்தரங்கிற்கான ஏற்பாட்டினை துணைத்தலைவர் பார்த்திபன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் செய்து இருந்தனர்.