கொரோனாவுக்கு பின் அன்பும் கருணையுமே வாழ்க்கை என்று உணர்வார்கள்

 

– நடிகர் விவேக்

வெள்ளி திரை நட்சத்திரமான விவேக் காமெடி நடிகராக இருந்தாலும் அதிலும் நாட்டு மக்களுக்கு எதாவது ஒரு கருத்தை தெரிவித்துவிடுவார்.

நடிப்பை தாண்டி தமிழ் மீதும், இசை மீதும் ஆர்வம் கொண்ட இவர் சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிடுவார்.

தற்பொழுது கொரோனா தாக்கத்தால் செய்வதறியாமல் திணறி கொண்டிருபவர்களுக்காக ஒரு கவிதையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயற்கையின் சீற்றங்கள் எப்படி தானாக ஏற்பட்டு தனிகிறதோ அதேபோல் இந்த கொரோனவும் தானாக அழிந்துவிடும் என்றும், இதன் பின் வள்ளலாரின் கருத்தான அன்பும், கருணையும் தான் வாழ்க்கை என்று மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று வள்ளலாரின் படத்துடன் பதிவிட்டுள்ளார்.