“மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்” – முதலமைச்சருக்கு பட அதிபர் வேண்டுகோள்

இது தொடர்பாக பட அதிபர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியேட்டர் திறந்தால், முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், இந்த படம் வெளியானால் விஜய்க்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என கேயார் தெரிவித்துள்ளார் பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பட அதிபர்களுக்கான விதிக்கப்படும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.