வெள்ளித்திரை தளபதி

நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஒ காதல் கண்மணி இந்த வரிசைகளில் ஒவ்வொரு படமும் மனித வாழ்வின் அப்பட்டமான உண்மைகளை கதைகளாக வடித்து தொகுத்து வழங்கிய திரை ரத்தினம் இன்று பிறந்த நாள் கொண்டாகிறார்.

இவரது தற்பொழுதைய படமான ‘பொன்னியின் செல்வன்’ மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் கொண்டு படமாக்கப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனா பதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துகொண்டே வருகிறது.

தமிழ் சினிமாவில் சங்கர் படம் என்றால் பிரமாண்டம், கமல் படம் என்றால் உலக சினிமா, பாரதிராஜா படம் என்றால் மண் வாசனை என ஒவ்வொரு இயக்குனர்களுக்கு ஒவ்வொரு தனி அடையாளம் உண்டு. ஆனால், மணிரத்தினம் படத்திற்கு மணி சார் படம் என்று அவர் பெயரை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைத்தும் இதில் இருக்கும்.

கதை என்றாலே பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் ட்ரெண்டை மாற்றி  ஒற்றை வரி வசனங்களால் படத்தை வண்ணமயமாக மாற்றியவர். ரயில் பயணம், பேருந்து பயணம், மழை கட்சிகள், இரவு கட்சிகள், 100 சதவிகித இயற்கை கட்சிகளுடன் பாடல்கள் என்று இவருக்கான பாணி தொடர்ந்து அதிகப்படியான பார்க்க முடியும் அதுவும் விதமாக.

வார்த்தையில் தான் சொல்ல வந்த கருத்து, நடிப்பில் அதன் வெளிப்பாடு என்று அதோடு நிறுத்தி விடாமல் கட்சிகளையும் இணைத்து ஒரு ஒவ்வொரு காட்சியும் ஒரு படமாக எடுத்திருப்பார்.

தாதாக்களின் படங்களுக்கு ஃகாட் பாதர் உலக அளவில் ஒரு முன்னோடியாக இருக்கும் என்றால் இவரின் நாயகன் படம் தேசிய அளவில் ஒரு முன்னோடி. இதில் வரும் வசனங்களின் நீளம் குறைவாக இருந்தாலும் அதன் தாக்கம் தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருக்கிறது.

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அஞ்சலி பாப்பா ஒரு முன்மாதிரி. மற்றவர்களை நடிக்க வைப்பதை விட குழந்தைகளை நடிக்க வைப்பது என்து சாதாரண காரியம் இல்லை. அதனை இவர் சாதரணமாக மிகை நடிப்பு இல்லாமல் அதனை உருவாக்கியிருப்பார்.

இவரது பல படங்கள் பலரை மீண்டும் மீண்டும் பார்க்க துண்டியுள்ளது. நடிகர்களுக்கு என உள்ள ரசிகர்களுக்கு இணையாக a manirathinam film என்ற பெயரை திரையில் காண்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர் என்பது முக்கியமாக குறிபிடத்தக்கது.