புதிதாக அமையவுள்ள மார்க்கெட் பகுதி நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மொத்த வியாபார கடைகளுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில் டாடாபாத் லாரி பேட்டை பகுதியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் பார்வையிட்டார்கள்.

மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சாலை மற்றும் வடிகால் அமைப்பது குறித்தும், வார்டு எண்.9க்குட்பட்ட மாநகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் புதிதாக அமையவுள்ள மொத்த வியாபார காய்கறி மார்க்கெட் பகுதியையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளார் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்கள். மாநகரப்பொறியாளர் லட்சுமணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்அரசன், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.