நடிகர் விவேக் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்

கொரோனா காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் பல பிரபலங்கள், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர், இளைஞர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களை (கண்டிப்பாக படிக்க வேண்டிய) குறிப்பிடலாமே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்திருக்கும் நடிகர் விவேக், “எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என் மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன் என்று,

இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா.

சுய வரலாறு : the other side of me!

உடற்பயிற்சி : make the connection

யோகநெறி அறிய : living with H.masters

மாணவர்களுக்கு : அக்னி சிறகுகள்” என்று விவேக் குறிப்பிட்டுள்ளார்.